ம் வட்டியோடு வளர்ச்சித் திட்டங்களாக திருப்பி தருவேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மோடி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“இந்திய வரலாற்றில் முக்கிய தடம் பதித்துக் கொண்டிருப்பதை காங்கிரஸ்- தி.மு.க கூட்டணியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஆகையால் மக்களை திசை திருப்ப முயற்சிக்கின்றனர்.
மேலும் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமராக முன்மொழிந்தமை, அக்கூட்டணியில் உள்ளவர்களுக்கே மகிழ்ச்சி தரவில்லை.
தேச பாதுகாப்பு விடயத்தில் கூட அரசியல் செய்யும் காங்கிரஸ் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான கட்சி.
அந்தவகையில் மக்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு நாம் தீர்வை வழங்கி வருகின்றோம்.
அதேபோன்று நாட்டின் காவலாளியான நான், விழிப்புணர்வுடன் இருந்து மக்களுக்காக சேவையாற்றுவேன்” என நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.