காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தின் காரணமாக வாகனத்திற்கும் இரண்டு மின்கம்பங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதிகாலை 3 மணியளவில் கல்முனைக்குடி பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பை நோக்கி சென்ற கெப் ரக வாகனம் ஒன்று பாண்டிருப்பு சந்தைக்கு அருகில் உள்ள இரண்டு மின்கம்பங்களில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் ஒரு மின்கம்பம் வாகனத்தின் மேல் விழுந்தள்ளது. விபத்தில் காயமடைந்த சாரதி கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாரதியின் கவனயீனம் காரணமாக இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாமென தெரிவித்த கல்முனை பொலிஸார், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.