LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, April 3, 2019

ஒதுக்கப்பட்ட காகிதங்களிலிருந்து கலைப்பொருட்களை தயாரிக்கும் நைஜீரிய கலைஞர்கள்!

நைஜீரியாவின் ஒரு முக்கிய நகரமான லாகோஸில் உள்ள கலைக் கூடத்தில் சாதாரண உபகரணங்களைக் கொண்டு ஆக்கபூர்வமான படைப்புகளை தயாரித்து வருகின்றது ஒரு குழு.

Funmi Adubi என்ற தொழில்முனைவர் மற்றும் கலைஞரின் பிரபலமான தரம்வாய்ந்த கலைக்கூடமொன்று மாணவர்களுக்கு சுய திறனாக்க உத்திகளை பயிற்றுவித்து வருகின்றது.

குறிப்பாக மீள் பயன்பாட்டு காகிதங்களையும், உபகரணங்களையும், அழகு சாதன பொருட்களையும் கொண்டு மலர்கள் உட்பட அலங்கார பொருட்களை தயாரிக்க கற்பிக்கின்றனர்.

சுய ஆக்கத்திறனைக் கொண்ட கலைஞரான ஃபன்மி அடுபி, பயன்பாட்டின் பின் நீக்கப்பட்ட காகிதங்கள் மற்றும் சில பொருட்களைக் கொண்டு பயன்மிக்க கைப்பணிப் பொருட்களை தயாரிப்பதே தனது நோக்கம் என்று தெரிவித்துள்ளார். நுகர்வோரின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான பொருட்களை தயாரிக்கும் முறைகள் இளம் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகின்றது.

பொதுவாக இங்கு காகிதங்கள் மற்றும் காகித மட்டைகள் என்பன அடிப்படை மூலங்களாக பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை தொழினுட்ப ரீதியாக கையாள்வதே இவர்களின் திறமையாக அமைகின்றது.

முன்னதாக இனிப்புப் பொருட்களை வியாபாரம் செய்யது வந்த ஃபன்மி கடந்த 2016 ஆம் ஆண்டு தனது இந்த தொழிற்துறையை ஆரம்பித்ததுடன், கைப்பணிப் பொருட்களைக் கொண்டு வர்த்தகத்தை விரிவாக்கம் செய்தார்.

அத்துடன் தனது வியாபாரத்தை விருத்தி செய்வதற்காக சமூக ஊடகங்களையும் அவர் பயன்படுத்துகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7