பரிஸில் செயற்படும் FATF எனப்படும் சர்வதேச நிதியமைப்பின் தடைசெய்யப்பட்ட நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் நெருக்குதலாலேயே இத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக பாகிஸ்தானுக்கு சுமார் 10 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பரிஸில் செயற்படும் குறித்த அமைப்பு பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு ஆதரவாக நிதியுதவி வழங்கிவருவதாக குற்றம் சுமத்தியிருந்தது.
இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அண்மையில் பாகிஸ்தான் சென்ற குறித்த குழு, அங்கு ஆய்வுகளை மேற்கொண்டு இதனை உறுதிசெய்திருந்ததன் பின்பே குறித்த தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை பாகிஸ்தானில் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என சர்வதேச நாடுகள் தொடர் அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.