தேர்தலின் பின்னரே எனது அரசியல் வாழ்க்கை ஆரம்பமாவதுடன் மக்களின் குரலாகவே ஒலிக்கின்றேன் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே எடப்பாடி பழனிசாமி இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“தேர்தலுக்கு பின்னர் அ.தி.மு.க ஆட்சி முடிவுக்கு வரப்போவதாக தி.மு.க உள்ளிட்ட சில கட்சிகள் கூறி வருகின்றனர். ஆனால் அது, வெறும் கானல் நீரே ஆகும்.
அந்தவகையில் புதுச்சேரி உட்பட 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் அ.தி.மு.க சிறந்த வெற்றியை தனதாக்கும்.
அதேபோன்று 22 இடைத்தேர்தல் தொகுதிககளிலும் நிச்சயம் வெற்றியடைவோம்.
மேலும் மக்களுக்காக நிறைய திட்டங்களை நிறைவேற்றி தந்திருக்கின்றேன். நான் மக்களின் தொண்டனாகவே பேசுகின்றேன்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.





