தனை தடுக்க வேண்டுமென முன்னாள் இராணுவ வீரர்கள், குடியரசு தலைவருக்கு கடிதத்தின் ஊடாக வலியுறுத்தியுள்ளனர்.
குறித்த கடிதத்தில் 8 முன்னாள் இராணுவ தளபதிகள் உள்பட 150க்கும் மேற்பட்ட இராணுவ அதிகாரிகள் கையெழுதிட்டுள்ளனர். இந்நிலையில் அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது,
“தேர்தலுக்காக ஓய்வுபெற்ற மற்றும் தற்போதுள்ள இராணுவத்தினர் பயன்படுத்தப்படுவது கவலையளிக்கின்றது.
மேலும் இராணுவ வீரர்கள் சாதனைகள் அல்லது அதன் நடவடிக்கைகளை அடிப்படையாக கொண்டு தேர்தல் பிரசாரங்களில் பெரும்பாலான கட்சிகள் ஈடுபடுகின்றன.
ஆகவே அதனை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் விரைவாக குடியரசு தலைவர் மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக இராணுவ படைகளை, மோடியின் சேனை என குறிப்பிடுவதையும் நிறுத்த வேண்டும்.
அதேபோன்று தேர்தல் பிரசாரத்திற்காக கட்சி தொண்டர்கள், இராணுவ சீருடைகளை அணிந்திருப்பது போன்று புகைப்படங்கள் விளம்பரம் செய்யப்பட்டு வருவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்” என அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால் முன்னாள் இராணுவத்தினரிடம் இருந்து எந்ததொரு கடிதமும் வரவில்லை” என ஜனாதிபதி மாளிகை அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.