அனர்த்த அபாயம் ஏற்படும் போது சிறுவர்களை எவ்வாறு பாதுகாத்தல்
தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி செயலமர்வு (02) மட்டக்களப்பில் நடைபெற்றது
மாவட்ட சிறுவர் அபிவிருத்தி நிதியம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துடன்
இணைந்து மாவட்டத்தில் அனர்த்தங்கள் ஏற்படும் போது சிறுவர்களை
எவ்வாறு பாதுகாத்தல் தொடர்பான நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் அபிவிருத்தி நிதியம் ஐரோப்பிய
ஒன்றியத்தின் நிதி உதவியின் கீழ் மட்டக்களப்பு
மாவட்டத்தின் வாகரை , கிரான் , கோரளைப்பற்று மத்தி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் அனர்த்த அபாயம் ஏற்படும் போது சிறுவர்களை
எவ்வாறு பாதுகாத்தல் தொடர்பான திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன
இது தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி செயலமர்வு இன்று மட்டக்களப்பு
வாலிப கிறிஸ்தவ சங்கத்தில் நடைபெற்றது
மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்கள உதவி பணிப்பாளர் எ
எஸ் எம் . சியாத் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு பயிற்சி செயலமர்வில்
வளவாலர்களாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்களான எம் எ . முராத் ,பி
எஸ் .சயந்தன் மற்றும் செயலமர்வில் கோரளைப்பற்று மத்தி உதவி பிரதேச செயலாளர் எஸ் எம் .அல் அமீன் , மாவட்ட சிறுவர்
அபிவிருத்தி நிதியத்தின் உத்தியோகத்தர்கள் ,, வாகரை , கிரான் , கோரளைப்பற்று மத்தி
ஆகிய பிரதேச செயலக பிரிவு இளைஞர்
,யுவதிகள் , ஆசிரியர்கள் ,அதிபர்கள் கலந்துகொண்டனர்
