பவங்களை வன்மையாக கண்டிப்பதாக பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
வத்திக்கானில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உயிர்த்த ஞாயிறு திருப்பலியை ஒப்புக்கொடுத்து உரையாற்றியபோதே பாப்பரசர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இன்று இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்கள் வேதனையையும், துக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக பரிசுத்த பாப்பரசர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கிறிஸ்தவர்கள் உயிர்த்த ஞாயிறு பண்டிகையை கொண்டாட ஆலய வழிபாடுகளில் ஈடுபட்டபோது இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டமை வருத்தமளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதனை கொடூரமான வன்முறை என விமர்சித்துள்ள பாப்பரசர், உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்காக பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.
இதேவேளை, எங்கிலிக்கன் திருச்சபையின் கென்டர்பெரி பேராயர் ஜஸ்டீன் வெல்பையும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், இலங்கை திருநாட்டிற்காக தொடர்ந்தும் பிரார்த்திப்பதாகவும் இவர் மேலும் தெரிவித்துள்ளார்.