தொடர்ந்து அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அன்பு, மீட்பு மற்றும் புதுப்பித்தலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட புனிதமான நாளில் நடந்திருக்கும் இந்த தாக்குதல், மனிதநேயத்தின் மேல் நடத்தப்பட்ட தாக்குதலாகும். இந்த குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாம் பிரார்த்திப்பதுடன், இலங்கை மக்களுக்கு துணையாகவும் நிற்க வேண்டும்” என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் என பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் தொடர்குண்டு வெடிப்புகள் நடைபெற்றன. இதில் சுமார் 290 பேர் உயிரிழந்ததுடன் அதிகமானோர் படுகாயங்களுடன் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈஸ்டர் பெருநாளில் இலங்கையை உலுக்கி உள்ள இந்த சம்பவத்துக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. அதேநேரம், பல்வேறு அரச தலைவர்கள் இரங்கலும், கண்டனமும் தெரிவித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.