இந்த தாக்குதலில் அப்துல் ரஷீத்தின் பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் குறித்த தாக்குதலிற்கு தலிபான் கிளர்ச்சி அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, அப்துல் ரஷீத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் முயற்சி இதுவெனவும் குறிப்பிடப்படுகின்றது.
ஆப்கானிஸ்தான் வரலாற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது உப ஜனாதிபதியான இவர், 2014ஆம் ஆண்டு இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.
அதே வருடத்தில் காபுல் விமான நிலையத்தில் அவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அவர் அதிஷ்டவசமாக உயிர் தப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.