வேண்டும் என்றும் அரசாங்கம் எனும் ரீதியில் அவர்களுக்கான உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் வழங்கத் தயாராகவே இருப்பதாகவும் அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர எம்மால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளத் தயாராகவே இருக்கிறோம்.
நாட்டில் இடம்பெற்றுள்ள இந்த பதற்றத்தை நீக்கி, நாட்டை இயல்பு நிலைமைக்குக் கொண்டுவருவோம். சர்வதேசத்திடம் இலங்கை மீதான நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்துவோம். சர்வதேசத்தினம் அச்சமின்றி நாட்டுக்கு வரவேண்டும்.
அதற்கான உரிய பாதுகாப்புக்களை அரசாங்கம் என்ற ரீதியில் நாம் வழங்குவோம். நாட்டில் இவ்வாறான அசாதாரண சூழ்நிலையொன்று வரும்போது, இராஜினாமா செய்து வெளியேறுவது பெரிய விடயமல்ல.
ஆனால், நாம் ஒன்றிணைந்து இந்த சவாலுக்கு முகம் கொடுக்க வேண்டும். இந்த அச்சத்தை முடிவுக்குக் கொண்டுவர நிச்சயமாக எம்மால் முடியும்.
சில குறைகள் இருக்கலாம். இதற்கான பொறுப்பை நாம் ஏற்றுக்கொள்கிறோம். இந்த தீவிரவாதம் இன்று ஆரம்பிக்கப்பட்டதல்ல.
2006 ஆம் ஆண்டிலிருந்து பிரச்சினை இருந்துதான் உள்ளது. இதற்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய கூட உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.
எனினும், நாம் இந்த விடயத்தில் எவருக்கும் குற்றம் சுமத்தப்போவதில்லை. தீவிரவாதிகளுக்கு என ஒரு அடையாளம் இல்லாது இருந்தமைத்தான் இந்த விடயத்தில் எமக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச ரீதியால தீவிரவாதம், இன்று புற்றுநோயைப் போல பரவியுள்ளது. இதனை இல்லாதொழிப்பதே பிரதான நோக்கமாக இருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.