அதன்படி போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கான திகதி குறிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கொழும்பு மோதர பகுதியில் சர்வ மத தலைவர்களுடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “போதை பொருள் வர்தகர்கள் ஒரு நாட்டின் தலை விதியை தீர்மானிக்கின்றனர் அவர்கள் யாரை அரயாசனத்தில் வைத்திருப்பதென்றும் யாரை அதிலிருந்து கீழை தள்ளவதென்றும் அறிவார்கள். அதனை உணர்து எனக்கும் போதை பொருள் குறித்து கதைக்காமல் இருந்திருக்க முடியும்.
அன்று அமைச்சராக இருந்து செய்ய முடியாதவற்றை இன்று ஜனாதிபதியாக இருந்து செய்வதற்கு முடிந்துள்ளது. இன்று போதை பொருளை ஒழிப்பதற்கு எடுத்திருக்கும் நடவடிக்கை சவாலானது.
இதற்காக சட்டங்களை மேலும் கடுமையாக்கவுள்ளேன். குறைந்த பட்ச தண்டனையான மரண தண்டனையை வழங்க தீர்மானித்துள்ளேன. அதற்கான திகதியையும் நான் நிர்ணயித்துள்ளே. அதனால் இந்த சவாலை அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டும். சிறந்த நாட்டை கட்டியெழுப்ப தண்டனைகள் முக்கியமானவை” என கூறினார்.
இதேவேளை அலுகோசு பதவிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முக தேர்வு எதிர்வரும் 2ம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது