ங்களில் உள்ள 96 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் இன்று (வியாழக்கிழமை) 66 சதவீதம் வாக்குகள் பதிவாகியதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில், அசாம் 76.22%, பீகார் 62.38%, ஜம்மு காஷ்மீர் 45.5%, கர்நாடகம் 67.67%, மகாராஷ்டிரா 61.22%, மணிப்பூர் 67.15%, ஒடிசா 57.97%, தமிழ்நாடு 66.36%, உத்தரப்பிரதேசம் 66.06%, மேற்கு வங்காளம் 76.42%, சத்தீஸ்கர் 71.40%, புதுச்சேரி 76.19% வாக்குகள் பதிவாகியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் 38 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. புதுச்சேரியில் ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும், தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதிக்கும் இன்று தேர்தல் நடந்தது.
அதேபோல், கர்நாடகா 14, மகாராஷ்டிரா 10, உத்தரபிரதேசம் 8, பீகார் 5, அசாம் 5, ஒடிசா 5, சத்தீஸ்கர் 3, காஷ்மீர் 2, மணிப்பூர் 1 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.
சரியாக காலை 7 மணிக்கு அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்குகளை பதிவுசெய்தனர்.
இதேவேளை, முதற்கட்ட நாடாளுமன்றத் தேர்தல் கடந்த 11ஆம் திகதி 91 தொகுதிகளுக்கு நடந்து முடிந்தது.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் நிலையில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் மே 23ஆம் திகதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.