உயிரிழந்த சிறுமியின் பெற்றோரை நேற்று (வெள்ளிக்கிழமை) நேரில் சந்தித்து கமல்ஹாசன் ஆறுதல் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே கமல்ஹாசன் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“இத்தகைய சம்பவங்கள் இனி ஒருபோதும் நிகழக்கூடாதென்ற ஆதங்கமும் கோபமும் எனக்குள்ளது. மேலும் வீட்டுக்கருகில் குழந்தைகள் விளையாடுவதற்கு பயப்படும் வகையில் நிலைமை காணப்படுமாக இருந்தால் அம்மாநிலம் சிறந்த மாநிலமாக இருக்க முடியாது.
சிறுமி கொல்லப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை இனங்காண்பது எளிது. ஆனால் தாமதம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. ஆகையால் இவ்விடயத்தில் அனைவரும் ஒன்றிணைந்து அழுத்தத்தை பிரயோகித்தாலே சிறுமியின் கொலைக்கு நீதியை பெற்றுக்கொள்ள முடியும்” என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
