LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, March 22, 2019

வடக்கில் வெப்பமான காலநிலை நிலவக்கூடுமென எச்சரிக்கை

நாட்டின் 9 மாவட்டங்களில் நாளை (சனிக்கிழமை) கடும் வெப்பமான காலநிலை நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, புத்தளம், குருநாகல், அம்பாந்தோட்டை மற்றும் மொனறாகலை ஆகிய மாவட்டங்களில் நாளை வெப்பமான காலநிலை நிலவுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், அதிக வெப்பத்துடனான வானிலை நிலவும் சந்தர்ப்பங்களில் அதிக நீரை பருகுமாறும், நிழலான இடங்களில் தரித்திருக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7