
காலநிலை மாற்றத்தின் மீதான உலகளாவிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சுமார் 150 நாடுகளில் இந்த ஆர்ப்பாட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து, பிரான்ஸ், இந்தியா, தென் கொரியா, அவுஸ்திரேலியா,பெல்ஜியம், ஜேர்மனி, சுவீடன், சுவிட்சர்லாந்து மற்றும் பல நாடுகளை சேர்ந்த மாணவர்கள் ஏற்கனவே இந்த ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளில் இணைந்துள்ளனர்.
சுவீடனை சேர்ந்த 16 வயது மாணவியான கிரேடா துன்பேர்க் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட காலநிலை மாற்றத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம் உலகம் முழுவதிலுமுள்ள மாணவர்களின் ஆதரவைப் பெற்றதையடுத்தே உலகளாவியரீதியில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன.
