கடந்த திங்கட்கிழமை திரையரங்கிற்கு சென்றிருந்த நான்கு சிறுவர்களே காணாமல் போயிருந்தனர்.
13 வயதான மூன்று சிறுவர்களும், 12 வயதான ஒரு சிறுமியுமே இவ்வாறு காணாமல் போயிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
காணாமல்போன சிறுவர்களைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியிருந்த நிலையில், அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் காணாமல்போன சிறுவர்களை கண்டுபிடிக்க உதவிய அனைவருக்கும் பொலிஸார் நன்றி தெரிவித்துள்ளனர்.






