ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் சிரிய நல்லிணக்கத்திற்கான மையத்தின் தலைவர் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
தீவிரவாதிகளின் கோட்டையாக திகழ்ந்த இட்லிப் மாகாணத்திலேயே இந்த ஆத்திரமூட்டல் செயற்பாட்டை முன்னெடுக்க திட்டமிட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆத்திரமூட்டல் செயற்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்கு பிரான்ஸ் மற்றும் பெல்ஜிய இரகசிய சேவை பிரதிநிதிகள் இட்லிப்பிற்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர்களின் மேற்பார்வையின் கீழ் தீவிரவாதக் குழுக்களின் தளபதிகளுடனான கூடடமொன்று இடம்பெற்றுள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
