அரசியல் சம்பந்தப்பட்ட கதைகளில் அதிகம் ஆர்வத்துடன் நடித்து வரும் மகேஷ்பாபு, அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவித்தார்.இதுகுறித்து தெரிவித்த அவர், “சினிமாவில் நடித்து கிடைக்கும் பெயர், புகழை வைத்துதான் எதிர்காலத்தில் அரசியலுக்கு வரவேண்டும் என்று ஆசைப்படவில்லை. அரசியல் என்பது புரியாத விடயமாகவே இருக்கின்றது. அதிலிருந்து நான் அதிக தூரத்தில் இருக்கின்றேன்.
அந்த வகையில், நாட்டில் நல்ல திறமைவாய்ந்த அரசியல்வாதிகள் நிறையபேர் இருக்கின்றார்கள். நான் அரசியலுக்கு வருவதால் அரசியலில் எந்த மாற்றமும் செய்துவிடப் போதில்லை. நடிப்பை நேசிக்கின்றேன். நடிப்புத்துறையில் நிறைய சாதிக்க வேண்டும்” எனக் கூறினார்.





