ஜெனீவா பிரேரணை குறித்து நாம் ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பீ.டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்திற்கு இன்று (புதன்கிழமை) விஜயம் கொண்டு நிலைமைகளை ஆராய்ந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
மேலும், காணாமலாக்கப்பட்டோருக்கான தீர்வுகள் கிடைக்க வேண்டும் என்பதில் அமெரிக்க உறுதியாக உள்ளதாகவும் அவர் கூறினார்.
கடந்தகால யுத்தத்தினால் பாதிப்புற்ற இலங்கையில் தீர்க்கப்படாத பல பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை சந்தித்து கலந்துரையாடியதாக தெரிவித்த அவர், அரசாங்கத்துடன் கலந்துரையாடி தீர்வுகளுக்கு முயற்சிக்க வேண்டும் எனவும் கூறினார்.
மேலும் யாழ்ப்பணத்திற்கு தொடர்ந்தும் விஜயங்களை மேற்கொள்ள ஆர்வமாக இருப்பதாகவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பீ.டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.





