ஐரோப்பிய ஒன்றியமானது ‘ஐரோப்பிய சுற்றுலாத் தகவல் மற்றும் அங்கீகார அமைப்பு’ என்ற புதிய ஒன்லைன் செயல்முறையொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கமையவே கனேடியர்களுக்கான இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விசா இன்றி ஐரோப்பாவை அணுகக்கூடிய குடிமக்களின் பாதுகாப்புச் சோதனைகளை பலப்படுத்தும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 60 நாடுகளை சேர்ந்தவர்கள் சுற்றுலா அல்லது வர்த்தக நோக்கத்திற்காக விசா இன்றி 90 நாட்களுக்கு ஐரோப்பாவிற்கு பயணிக்கலாம்.
ஆனால், இந்த புதிய திட்டத்திற்கமைய ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிப்பதற்கு முன்னர் கனேடியர்கள் உள்ளிட்ட பிற நாட்டவர்கள் பாதுகாப்பு அனுமதிக்காக விண்ணப்பித்து, கட்டாய கட்டணமொன்றை செலுத்த வேண்டியது அவசியமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
