அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘தளபதி 63’ திரைப்படத்தில் பிரபல பொலிவுட் நடிகர் இணைந்துள்ளார்.இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வருகின்ற நிலையில், இப்பட குழுவினருடன் பிரபல பொலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் இணைந்திருக்கின்றார்.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். அதேநேரம், விவேக், கதிர், யோகிபாபு, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் இப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





