LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, March 27, 2019

52 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய உயிரினங்களின் புதை படிமங்கள்!

சுமார் 52 கோடி ஆண்டுகள் முன்பு வாழ்ந்த ஆயிரக்கணக்கான உயிரினங்களின் புதை படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஹூபே மாகாணத்திலுள்ள டான்ஷூய் ஆற்றங்கரை அருகே புதைபடிம ஆய்வாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

இதன்போது சுமார் 52 கோடி ஆண்டுகள் முன்பு வாழ்ந்த ஆயிரக்கணக்கான உயிரினங்களின் புதை படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதுவரை 20,000 இற்கும் மேற்பட்ட புதைபடிமங்கள் சேகரிக்கப்பட்டு, அவற்றில் புழுக்கள், ஜெல்லி மீன், கடல் அனிமோன், பாசி உள்ளிட்ட உயிரிகளின் 4,351 புதைபடிமங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

புதைபடிமமான பல உயிரினங்களின் தோல், கண்கள் மற்றும் உள் உறுப்புகள் மிகவும் நேர்த்தியாக புதைபடிமமாகி பதனமாகி இருப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள உயிரினங்களில் பாதிக்கும் மேலானவை இதற்கு முன்னர் கண்டறியப்படாதவை என குறிப்பிட்டுள்ள புதை படிமவியல் வல்லுநர்கள், இது பிரமிக்கத்தக்க கண்டுபிடிப்பு எனவும் தெரிவித்துள்ளனர்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7