LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, March 10, 2019

தவக்கால சிந்தனைகள்-10

10.“உறுதியற்ற உள்ளத்தோரே உங்களுக்கும் ஐயோ கேடு|  ஏனெனில் அவர்கள் பற்றுறுதி கொள்ளவில்லை. எனவே அவர்க
ளுக்குப் பாதுகாப்பு இராது.
தளர்ச்சிடைந்தோரே உங்களுக்கும் ஐயோ கேடு வரும் !  ஆண்டவர் உங்களைச் சந்திக்க வரும்போது என்ன செய்வீர்கள்?
ஆண்டவருக்கு அஞ்சுவோரே அவரது சொற்களைக் கடைப்பிடிப்பர்| அவர் மீது அன்பு செலுத்துவோர் அவர் தம் வழியைப் பின்பற்றுவர்.”

இறைவனைச் சந்திக்கின்றபோது நாம் என்ன செய்யப்போகின்றோம்? நாளொன்றுக்கு பல தடவைகளில் இறைவன் நம்மைச் சந்திக்கிறார். நமக்கு முன்பின் அறிந்திராத வேடங்களில் அவர் எம்மைச் சந்திக்க வருகிறார். அவரைச் சந்திக்க நாம் தயாராக இருக்கின்றோமா? அப்படிச் சந்திப்பதில் ஆவலாக இருக்கின்றோமா? இந்தத் தவக்காலத்தில் நம்மைத் தேடி ஏழை வடிவில், நாம் அறியாதார் வடிவில் அவர் வருவதை நாம் உணர்ந்து கொள்ளத் தயாரா? பல தடவைகளில் ஏழைகள் பொய்யர்கள் என்றும், நம்மை ஏமாற்றி பிழைப்பாக பிச்சை எடுக்கிறார்கள், உழைக்க விரும்பாதவர்கள் என்று அவர்களுக்கு உதவ முன்வராத நம் நடத்தையை நாம் நியாயப்படுத்த முயல்வதுண்டு. காரணங்களைக் கண்டு பிடிக்க முயல்வதனால் நம் பொறுப்புக்களிலிருந்து நாம் தப்பி விட முடியாது.  நம்மை நோக்கி உதவிக்காக நீட்டும் கரங்களுக்கு உதவி செய்வதே நம் கடன். உண்மையில் அக்கரங்கள் பொய்யானவையாக, நம் உதவிக்கு தகமையற்ற கரங்களாக இருக்குமனால் இறைவனே அதனைத் தீர்மானித்து அதற்கு வேண்டிய தண்டனை வழங்குவார். அதை விடுத்து மற்றவரைத் தீர்ப்பிட்டு நமது கடமையை அனாவசியமான காரணங்களால் நாம் பறக்கணிப்போமானால் அதற்கான தண்டனையையும் சேர்ந்தல்லவா நம்மீது வந்து சேரும்?
ஐந்தாம் நிலை
இயேசு சிலுவை சுமக்க சீரேனான சீமோன் உதவி செய்கின்றார் .. ..

திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகின்றோம்.
அது ஏதென்றால் உம்முடைய திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர் சுவாமி.
“இறைவா  என்னை  மீட்டருளும்; ஏனெனில்  வெள்ளம்  என்  கழுத்து  மட்டும்  பெருக்கெடுத்துள்ளது.
“ஆழ்ந்த  சேற்றில்  அமிழ்ந்திக்  கிடக்கின்றேன்,  கால்  ஊன்ற  இடமேயில்லை. ஆழ்ந்த  வெள்ளத்தில்  அகப்பட்டுக் கொண்டேன், வெள்ளம் என்னை மூழ்கடிக்கின்றது;
“கூவிக் கூவி களைத்துவிட்டேன், என் தொண்டையும் வறண்டு போயிற்று என் இறைவன் துணையை எதிர்பார்த்து  என்  கண்களும்  பூத்துப் போயின.” (சங். 68 : 1 – 3)
தண்ணீரில் தத்தளிக்கும் எறும்பு கூட உயிர் தப்பிக் கரை சேர சிறு துரும்பாவது கைகொடாதா என்றுதான் வழி பார்க்கும்.
மூச்சுமுட்டி, சுவாசம் தடைப்படும்போதுதான் காப்பாற்ற ஏதும் - யாரும் - அகப்படமாட்டார்களா என்று கை எட்டித் தாவுகின்றது.
தலையிடியும் காய்ச்சலும் தனக்கொன்று, பிறனுக்கொன்றா? பாதையிலே நெருஞ்சி முள். அது ஆள் பார்த்துக் குத்துவதில்லை. அது குத்தினாலும் வரும் வேதனையும், வலியும் சகலருக்கும் ஒன்றே!

சேற்றிலே சிக்கிவிட்ட யானையைத் தேரை கூட ஒரு முறை உதைத்துப் பார்க்குமாம்.

பொறியென்று தெரியாத நிலையில்தான் எலி உணவு தேடி அதிலே நுழைந்து மாட்டிக் கொள்கிறது. மாட்டிக் கொண்ட பிறகுதான் அறிவு வந்து ஒட்டிக் கொள்கிறது.;
நான் வாழ நீ சாகலாம் என்னும் மனம், நீ வாழ நான் சாவேன் என்கிறதா?
சிந்திப்போம்:
பிறரை எண்ணி அவருக்காக வாழும் மனப்பான்மையை எனக்குக் கற்பித்து வழி காட்டிய இயேசுவே உமக்கு நன்றி!
தன்னலத்தை ஒதுக்கிவிட்டுப் பிறர்நலத்திற்கு முதலிடத்தை என் வாழ்வில் கொடுக்க வரம் தந்த இறiவா உமக்கு நன்றி!
துணையின்றி பரிதவிப்பவர்க்கு உதவுகின்ற மனத்தையும், வாய்ப்பையும் எனக்குத் தந்த இறiவா உமக்;கு நன்றி!
நெஞ்சிலே காயப்பட்டு கண்ணீரில் தத்தளிக்கும் உள்ளங்களுக்கு இதம் தரக் கூடிய ஆறுதல் வார்த்தைகளை எனக்குள்ளே விதைத்து வளரப்பண்ணிய இறiவா உமக்கு நன்றி!

எங்கள் பேரிற் தயவாயிரும் சுவாமி,
எங்கள் பேரிற் தயவாயிரும்!
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் சருவேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவன – ஆமென்!

ஆனந்தா ஏஜீ. இராஜேந்திரம்



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7