பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தை பெரிதும் விமர்சித்து வந்த ஒரு செய்தி இணையத்தளம் என ரெப்லர் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன் மீதான கைது நடவடிக்கையானது, “இணைய – அவதூறு” என்ற குற்றச்சாட்டுடனான பிரசுரத்தை மௌனப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டெர்ட்டெ அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சி என்று மரிய ரெஸ்ஸா தெரிவித்துள்ளார்.
அவருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளின் ஒரு தொடர்ச்சியாக அண்மைய நடவடிக்கையாக இந்த கைது இடம்பெற்றுள்ளது.
ரெப்லர் இணையத்தளத்தின் செய்திகளை போலியான செய்தி என்று வர்ணித்துள்ள ஜனாதிபதி, மரியாவுக்கு எதிராக முன்பு தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அரசியல் ரீதியாக ஊக்கமளிக்கப்பட்டவை என்பதை மறுத்துள்ளார்.
இந்த கைது நடவடிக்கை தொடர்பான காட்சிகளை ரெப்லரின் ஊடகவியலாளர்கள் நேரலையாக பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் வௌியிட்டிருந்தனர்.
எனினும். இந்த விடயத்தை பதிவு செய்ய வேண்டாம் என்று தேசிய விசாரணைகள் பணியகத்தின் அதிகாரிகள் எச்சரிக்கை விடுக்கும் காட்சிகளும் அதில் பதிவாகியுள்ளன.






