
வெலிமடயில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு கருத்து வெளியிட்ட அவர், “சிறைச்சாலைக்குள் இருந்தே போதைப்பொருள் கடத்தல் வியாபாரம் இடம்பெற்று வருகின்றது.
அதனை இல்லாமலாக்குவதற்கு நாங்கள் எடுத்த வேலைத்திட்டம் அரசியல் சூழ்ச்சி காரணமாக தடைப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் ஆரம்பித்துளோம்.
இன்று சிறைச்சாலைகளுக்குள் போதைப்பொருள் கடத்தல் வியாபாரங்களை மேற்கொள்ள சிறைக்காவலர்களுக்கு சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.
நேற்று வெலிக்கடை சிறைக்காவலாளி ஒருவர் சிறைச்சாலைக்குள் ஹெராேயின் கொண்டு செல்லும்போது பிடிபட்டுள்ளார்.
அரசியல்வாதிகள் என்றவகையில் எந்தவேளையும் இந்த பதவிகள் எங்களுக்கு இல்லாமல்போகலாம். ஆனாலும் இருக்கும் காலத்தில் நாட்டுக்காக நல்ல விடயங்களை மேற்கொள்ளவேண்டும்“ என தெரிவித்துள்ளார்.
