ஒவ்வொரு வாரமும் வெளியாகும் தமிழ் திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. சில பெரிய முதலீட்டு முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும்போது, சிறிய முதலீட்டு நிறுவனங்களின் திரைப்படங்கள் பின்வாங்குகின்றன.அந்தவகையில், கடந்த வாரம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’, ‘சர்வம் தாளமயம்’, ‘பேரன்பு’ உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகின.
இந்நிலையில், இந்த வாரம் 7ஆம், 8ஆம் திகதிகளில் மாத்திரம் மொத்தம் 8 திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.
அந்த வகையில், ‘தில்லுக்கு துட்டு 2’ இத்திரைப்படத்தில் சந்தானம், தீப்தி, ராஜேந்திரன், பிபின், உத்சவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘தில்லுக்கு துட்டு 2’ திரைப்படம் எதிர்வரும் 7ஆம் திகதி வெளியாகவுள்ளது.
இதனைத் தொடர்ந்து ‘பொது நலன் கருதி’ இத்திரைப்படத்தில் சந்தோஷ் பிரதாப், அதிதி அருண், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மேலும், ‘நேத்ரா’, ‘வாண்டு’, ‘அவதார் கோட்டை’, ‘யாத்ரா’, தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள ‘வினையா விதியா ராமா’ திரைப்படம் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றது.
இதேபோன்று, ‘அலைட்டா பேட்டில் ஏஞ்சல்’ என்ற ஆங்கில திரைப்படம் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றது.
அந்தவகையில் இந்த வாரம் மொத்தமாக 8 திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.





