இதனை அடுத்து நாட்டில் 36 ஆயிரம் கிராமங்கள் தழுவிய அபிவிருத்தித் திட்டமொன்றைத் தயாரித்து 50 இலட்சம் குடும்பங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் அல்லாத ஒருவர் ஜனாதிபதியாகுவதற்கு பொதுஜன பெரமுன ஆதரவு வழங்காது என பசில் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
அத்தோடு பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவரே ஜனாதிபதி வேட்பாளர் என்றும் பசில் ராஜபக்ஷ கூறிய கருத்துக்கு பெரும் எதிர்ப்புக்கள் அக்கட்சியில் இருந்தே உருவாகியது.
குறிப்பாக அக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார கடுமையாக சாடியிருந்தார்.
இந்நிலையில், மீண்டும் பசில் ராஜபக்ஷ டிசம்பர் 9 இல் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்துகொள்வார் என கூறியுள்ளார்.
இந்த விடயமானது அக்கட்சிக்குள் இருக்கும் பிற கட்சிகளுடன் முரண்பாட்டை தோற்றுவித்துள்ளது. இந்நிலையில் பசிலின் கருத்தால், மஹிந்த தலைமையிலான மொட்டு கட்சிக்குள் பிளவு ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.






