ஹொலிவுட் சினிமாவின் உயர்ந்த விருதாகக் கருதப்படும் ஒஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) நகரில் உள்ள டொல்பி திரையரங்குகளில் நாளை (திங்கட்கிழமை) காலை ஆரம்பமாகவுள்ளது.ஒஸ்கார் விருது விழாவுக்காக ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் உள்ள சினிமா கலைஞர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பார்கள்.
அந்தவகையில் இம்முறை 91ஆவது ஒஸ்கார் விருது விழா நாளை பிரம்மாண்டமாக ஆரம்பமாகவுள்ளது.
‘திஃபேவரைட்’ மற்றும் ‘ரோமா’ திரைப்படங்கள் அதிக பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. தலா 10 பிரிவுகளில் இந்த இரண்டு திரைப்படங்களும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
‘Period. End of Sentence’ என்ற திரைப்படம் ஆவணப்படைப்பிரிவில் ஒஸ்காருக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நிஜமான பேட்மேனான கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தத்தின் சிறப்பான பணியை பற்றி பேசும் படமாகும்.
இந்த விழாவை, ஹொட் ஸ்டாரில் நேரடியாகப் பார்க்க முடியும். அதேபோன்று டுவிட்டரிலும் இந்த விழா நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றது





