LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, February 13, 2019

நித்தம் சிவத்துளிகள் 83



——— நமசிவாய வாழ்க ———

நானென்ற ஆணவம் துறந்தேனே
இவ்வினைப் பிறவி கடப்பேனே
குருவென சிவனே உனையாக்கி
உன்னுள் சரணம் அடைந்தேனே

திருவருள் கருணைப் பெருமானே
திறனெனக் கதியை தரவேண்டி
தினமுனை நினைத்து புகழ்பாடி
சிவப்புகழ் அதனில் திளைப்பேனே

விரிசடை அண்ணல் சிவகோணே
நிறமுடை ஏழும் அறிந்தேனே
சக்கரம் ஆறில் உனையேற்றி
வானதின் வில்லாய் உணர்ந்தேனே

அறிதற் அரிய அரனாரே
அன்பை மொழிந்த சிவனாரே
அன்பே மொழியே எனதாக்கி
அகிலம் எல்லாம் பொழிந்தேனே

பம்பரம் போலே சுழன்றாடும்
அம்பலத் தாண்டவ பெருமானே
அரனே யுந்தன் கழல்போற்றி
உன்னுள் சரணம் அடைந்தேனே

சங்கரன் ஜெய சங்கரன்❤️
       சிவனடியான்🙏





 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7