LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, January 11, 2019

மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியல் தரவரிசையில் கனடா பின்னடைவு!

2019 ஆம் ஆண்டில் உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் தரவரிசையில் கனடாவின் நிலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருகிறது.

இந்த பட்டியலில் கனடா 7 ஆவது இடத்தில் உள்ளது. அதன்படி கனடாவின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி 184 நாடுகளுக்கு வீசா இல்லாமல் சென்று வரலாம்.

கடந்த 2014 ஆம் ஆண்டு உலக சக்திவாய்ந்த கடவுசீட்டு பட்டியலில் 2 ஆம் இடத்தில் இருந்த கனடா 2015 இல் 4, 2016 முதல் கடந்த வருடம் வரை கனடா 6 ஆவது இடத்தில் இருந்த நிலையில் தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது.

2019ஆம் ஆண்டில் உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் தரவரிசையை கடவுச்சீட்டு தொடர்பில் ஆண்டுதோறும் கருத்துக்கணிப்பை வெளியிடும் ஹென்லி கடவுச்சீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

குறித்த நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலின் படி, உலகின் அதிசக்திவாய்ந்த கடவுச்சீட்டு என்ற பெருமையை இரண்டாவது ஆண்டாகவும் ஜப்பான் நாட்டு கடவுச்சீட்டு பெற்று முதலாவது இடத்தை பிடித்துள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7