ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக மைத்திரிபால சிரிசேனவை ஆதரிப்பது இல்லை என மாகாண சபை உறுப்பினர்கள் ஏகமனதாக தீர்மானித்துள்ளனர்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாகாண சபை உறுப்பினர்களே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக என முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் அடுத்துவரவிருக்கும் மாகாண சபைத் தேர்தலில் மொட்டுச் சின்னத்தில் கூட்டணியாக போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





