LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, January 25, 2019

மாணவர்களுக்கும் , பொதுமக்களுக்கும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு செயலமர்வு


 ஜனதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரமாக  ஜனவரி 21 ஆம் திகதி  தொடக்கம்  25 ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டு போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டங்கள் நாடளாவிய ரீதியில்  நடைமுறைப்படுத்தப்படுகின்றது
.

இதற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு செயல்திட்டங்கள் பாடசாலை மாணவர்களுக்கும் , பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயலமர்வுகள்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட  மாமாங்கம் ,அமிர்தகழி ஆகிய கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கும் கிராம பொதுமக்களுக்கும் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான  விழிப்புணர்வு செயலமர்வு மட்டக்களப்பு மாமாங்கம் ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தில்  இன்று நடைபெற்றது

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவின் மாமாங்கம் மற்றும் அமிர்தகழி கிராம சமுர்த்தி உத்தியோகத்தர்களின் ஒழுங்கமைப்பில் பாடசாலை அதிபர் வி .முருகதாஸ் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு செயலமர்வில் வளவாளர்களாக மட்டக்களப்பு மது வரி அத்தியட்சகர் அலுவலக மது வரி பரிசோதகர் பி .காண்டீபன் ,மற்றும் மட்டக்களப்பு மது வரி அத்தியட்சகர் அலுவலக உத்தியோகத்தர் எச்  வி தர்மரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்

இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் ,ஆசிரியர்கள் ,மாமாங்கம் மற்றும் அமிர்தகழி கிராம சமுர்த்தி சங்கங்களின் உறுப்பினர்கள் ,கிராம அபிவிருத்தி மாதர் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்






 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7