LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, January 9, 2019

வாக்கெடுப்பில் தோல்வியடைந்தால் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படும் – தொழிற்கட்சி

பிரெக்ஸிற் ஒப்பந்தம் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பில் பிரதமர் தோல்வியடையும்பட்சத்தில் தெரேசா மே-யின் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்படுமென தொழிற்கட்சி தெரிவித்துள்ளது.

வரும் 15 ஆம் திகதி பிரதமர் தெரேசா மே-யினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரெக்ஸிற் ஒப்பந்தம் மீது நாடாளுமன்ற வாக்கெடுப்பு இடம்பெறவுள்ள நிலையில் தொழிற்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான Barry Gardiner இன்று இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் பிரெக்ஸிற் ஒப்பந்தம் நாடாளுமன்றத்தல் நிராகரிக்கப்பட்டால் பிரதமர் பதவி விலகுவாரா என தொழிற்கட்சித் தலைவரால் இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பிரதமர் தெரேசா மே இல்லை என பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரின் பிரெக்ஸிற் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் நாடாளுமன்ற வாக்கெடுப்பின்போது ஒப்பந்தம் அங்கீகரிக்கப்படுமா எனும் சந்தேகம் எழுந்துள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7