அயர்லாந்துக்கான கனடாவின் தூதராக உள்ள கெவின் விக்கர்ஸ், நியூ பிரன்சுவிக் மாகாணத்தின் லிபரல் தலைவர் பதவியை விரைவில் ஏற்றுக்கொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், முன்னாள் முதல்வர் பிரையன் கல்லன்ட் திட்டமிட்டதைவிட முன்னரே லிபரல் தலைவர் பதவியில் இருந்து விலகுவார் என அறிவித்துள்ளார்.
பார்லிமென்ட் ஹில் மீதான 2014 தாக்குதலுக்கு முடிவுகட்டுவதற்காக ஒரு கதாநாயகனாக செயற்பட்ட கெவின் விக்கர்ஸ், தொடர்ந்தும் அரசியலில் ஈடுபட தீர்மானித்துள்ளார்.
அந்தவகையில் குறித்த நியூ பிரன்சுவிக் மாகாணத்திற்கான தலைவர் பதவிக்கு போட்டியிட அவர் நீண்ட நாளுக்கு பின்னர் முடிவை எடுத்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





