
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று (வெள்ளிக்கிழமை) நடத்திய விசேட பேச்சுவார்த்தையின் முடிவில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பேச்சுவார்த்தை இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அவரின் செயலாளர் மற்றும் ஆலோசகர் ஆகியோருக்கும் இடையில் இடம்பெற்றது.
இந்த பேச்சுவார்த்தை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது.
இதன்போது வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுப்பது குறித்த பேச்சுவார்த்தை நீண்ட காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் அதற்கான செயற்பாடுகள் இடம்பெறவில்லையென தெரிவிக்கப்பட்டது.
எனவே இது குறித்து விசேட கவனம் செலுத்துவதோடு, இவ்வாண்டுக்குள் 17 ஆயிரம் வீடுகளை அமைத்துக்கொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
