அனாமிகாஞ்சலி எனும் தலைப்பின் கீழ் அனாமிகா நினைவுப் பேருரையும், 'ஒரு தேவதையின் சிறகசைப்பு' கவிதை நூல் வெளியீட்டு
நிகழ்வும் ஓவியக் கண்காட்சியும் அரங்க வார இதழ் ஆசிரியர் பூ .சீவகன் தலைமையில் மட்டக்களப்பு பொது நூலக கேட்போர்
கூடத்தில் நடைபெற்றது
ஒரு தேவதையின் சிறகசைப்பு கவிதை நூல்
வெளியீட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக
மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் கலந்துகொண்டு ஒரு தேவதையின் சிறகசைப்பு
கவிதை நூலினை வெளியிட்டு வைத்தார் இந்த நூலின் முதல்
பிரதியினை மட்டக்களப்பு தமிழ்ச் சங்க சைவப் புலவர் வி .ரஞ்சிதமூர்த்தி
பெற்றுக்கொண்டார்
கவிஞர் எழில்வண்ணனின் நிகழ்ச்சி
தொகுப்பில் மகுடம் ஆசிரியர் வி. .மைக்கல் கொலினின் வரவேற்புரையுடன் ஆரம்பமான
இந்நிகழ்வில் நூலின் அறிமுகவுரையினை சுவாமி
விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி பிரியதர்சினி ஜெதீஸ்வரன் வழங்கினார்
நிகழ்வில் கவிதாஞ்சலியினை கவிதாயினி திருமதி சுதாகரி மணிவண்ணன் வழங்கியதோடு
, நினைவுப் பேருரையை சுவாமி விபுலானந்த
அழகியல் கற்கைகள் நிறுவக சிரேஷ்ட விரிவுரையாளர்
கலாநிதி தெ. பிரதீபன் நிகழ்த்தினார்
ஓவிய அறிமுகத்தினை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி க.சிவரெத்தினம் செய்தார்
இந்நிகழ்வில் ஓய்வுநிலை
பேராசிரியர் மௌனகுரு ,மற்றும் கவிஞர்கள் ,எழுத்தாளர்கள், மாணவர்கள் என பலர்
கலந்துகொண்டனர்
