LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, December 19, 2018

கிழக்கு மாகாண ஆளுனர் -சிங்கப்பூர் சீன வர்த்தக கைத்தொழில் சம்மேளனம் சந்திப்பு

கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகமவுக்கும் சிங்கப்பூர் சீன வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்துக்கும் இடையிலான சந்திப்பு
நேற்று (18) செவ்வாய்க் கிழமை சிங்கப்பூர் நாட்டின் வர்த்தக சம்மேளன தலைமையக அலுவலகத்தில் இடம் பெற்றுள்ளது.
சுமார் 40000 அங்கத்தவர்களை கொண்ட வர்த்தகர்கள் சிங்கப்பூர் சீனா வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தில் அங்கம் வகிக்கின்றனர் .

கிழக்கு மாகாணத்தை சிங்கப்பூர் நாட்டுடன் இணைந்து பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொள்ளவும் முதலீடுகளை கொண்டு வருவதற்குமான ஒரு சிறந்த பேச்சுவார்த்தை இடம் பெற்றது. விவசாயம், மீன்பிடி, சுற்றுலா, உள்நாட்டு உற்பத்தி உட்பட பல வர்த்தக உடன்படிக்கைகளுக்கான பலதரப்பட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

100 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதி மிக்க  முதலீடுகளை கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காக 2019 ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்குள் நடை முறைப்படுத்தவுள்ளதாக இதன் போது தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காக குறித்த துறைகளில் முதலீடுகளை மேற்கொண்டு மாகாணத்தை அபிவிருத்தியடையச் செய்வதில் பலதரப்பட்ட பங்குகளை விசேடமான துறைகள் ஊடாக மேற்கொள்ள ஒரு கட்ட நடவடிக்கையாகவும் இக் கலந்துரையாடலின் பிரதான நோக்கமாகவும் கருதப்படுகிறது.

கிழக்கு ஆளுனர் ரோஹிதபோகொல்லாகம தலைமையிலான  இவ் சிங்கப்பூர் நாட்டு விஜயத்தில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி, முதலமைச்சின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ், பிரதம செயலாளர் டி.எம்.சரத் அபயகுணவர்தன, ஆளுனரின் செயலாளர் அசங்க அபேவர்தன, கிழக்கு ஆளுனரின் இணைப்புச் செயலாளர் நிமால் சோமரத்ன,கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் பணிப்பாளர் ஹஸன் அலால்தீன் உள்ளிட்டோர்களும் கலந்து கொண்டார்கள்.
(அ .அச்சுதன்)














 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7