LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, December 11, 2018

பேத்தாழை பொது நூலகத்தின் ஏழாவது வருட நிறைவு


                                   (தர்சன்)
வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பேத்தாழை பொது நூலகத்தின் ஏழாவது வருட நிறைவும், பரிசளிப்பு விழாவும் நூலக கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது.

நூலகப் பொறுப்பாளர் திருமதி.தாரணி தங்கத்துரை தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் கலந்து கொண்டார்.

மேலும் அதிதியாக மட்டக்களப்பு பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ்.பிரகாஸ், கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் திருமதி.பத்மலோஜினி லிங்கேஸ்லரன், கிழக்குப்  பல்கலைக்கழக சிரேஷ்ட உதவி நூலகர் எம்.என்.ரவிக்குமார், கோறளைப்பற்று பிரதேசசபை சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.குகநேசன், வாழைச்சேனை பொது நூலக நூலகர் திருமதி.அப்துல் மஜித் ஜெஸ்மி கப்சா, முன்னாள் பேத்தாழை நூலகர் ரி.சரவணபவான், பேத்தாழை பொது நூலக ஸ்தாபகரின் தாயார் திருமதி.கமலா சிவநேசதுரை, பாடசாலை அதிபர்கள், கிராம சேவகர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், நூலக உத்தியோகத்தர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், சனசமூக நிலைய உறுப்பினர்கள், கிராம அபிவிருத்திச் சங்கத்தினர், மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது வாழைச்சேனை பேத்தாழை பொது நூலகத்தின் நூலகக் கொடியும், நூலகக் கீதமும் கலந்து கொண்ட அதிதிகளால் வெளியீட்டு வைக்கப்பட்டதுடன், நூலகத்தின் ஏழாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அதிதிகளால் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

அத்தோடு தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு வாழைச்சேனை பிரதேச எல்லைக்;குட்பட்ட பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட கலை இலக்கியம் சார்பான போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் அதிதிகள் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், நூலக கீதத்தினை இயற்றிய கலைஞர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். பேத்தாழை பொது நூலகம் தேசிய ரீதியில் மூன்று விருதுகளைப் பெற்று விளங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.













 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7