இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
கடந்த 1978ம்ஆண்டு தென்னிலங்கையில் ஏற்பட்ட நிலமைகள் காரணமாக நாம் அக்காலத்தில் பாராளுமன்ற உறுப்பினராக விருந்த இரா சம்பந்தனின் அறிவுரைக்கமைய கப்பல்துறையில் குடியமர்த்தப்பட்டோம்.
பிற்காலத்தில் இடம்பெற்ற வன்செயல்கள் காரணமாக சீனக்குடா கிளப்பன்பேக் முகாமில் பல வருடங்களாக அகதிகளாக வாழ்ந்து வந்த நிலையில் 1994ம் ஆண்டு மீண்டும் கப்பல்துறை, மற்றும் புனர்வாழ்வு அமைச்சராக விருந்த எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்களினால் அரசாங்கத்தின் ஏற்பாட்டில் மீளக்குடியமரத்தப்பட்டோம். அக்காலத்தில் தமிழ் முஸ்லீம்,சிங்கள மக்கள் இணைத்து குடியமர்த்தப்பட்டபோதும் தமிழ் மக்கள் மட்டும் அவர்களது காணி அபிவிருத்தியை செய்யமுடியாது வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்ய முடியாது இன்றுவரை திண்ணடாடுகின்றனர்.
இதற்கான தடையை துறைமுக அதிகார சபையினர் மேற்கொண்டவண்ணமுள்ளனர். காணி இன்னும் அவர்களது பிடியில் உள்ளதால் இந்நிலமை ஏற்பட்டுள்ளது
இது தொடர்பாக பலமுறை பல அதிகாரிகளுக்கும் முறையிட்டும் பலனளிக்கவில்லை. நல்லாட்சியின் ஆரம்பத்தில் துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சராக விருந்த அர்ஜினாரணதுங்க திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு வருகைதந்தபோது இம்மக்களுக்கான காணி ஆவணங்கள் வழங்குவதற்கான ஏற்பாட்டைசெய்வதாக உறுதியளித்திருந்தார்.
ஆனால் இது இன்றுவரை இடம்பெறவில்லை. தற்சமயம் தென்னை அபிவிருத்திச்சபை,மற்றும் விவசாயத்திணைக்களங்கள் முலம் பல வாழ்வாதார உதவிகள் வழங்கப்படுகின்றது. அவற்றிக்கு காணி ஆவணங்கள் முக்கியமானவையாகவுள்ளன. முஸ்லீம்மக்கள் மற்றும் சிங்கள மக்கள் தமது அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் தாம்குடியிருக்கும் காணிகளில் வாழ்வாதார முயற்சிகளை செய்கின்றபோதும் தமிழ் மக்கள் முற்றாக பாதிக்கப்பட்ட நிலையில் சிரமப்படுகின்றனர்.
1978.ல் இருந்து அபிவிருத்தியடையாத சூழலில் நகரப்பகுதியில் சிரமப்படுகின்றோம் எனவும் அவர் முறையப்பாட்டில் தெரிவித்துள்ளனர். எனவே உடன் இந்த மக்களின் பிணக்கை தீர்த்து ஏனைய மக்களைப்போன்று அரசின் சகல உதவிகளையும் பெற வாய்ப்பளிக்குமாறு இவர்கள்வேண்டுகொள் விடுக்கின்றனர். கப்பல்துறையில் 465 குடும்பங்கள் உள்ளபோதும் சுமார் 300 குடும்பங்களைச்சாரந்த மக்கள் இவ்வாறு புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான காணி ஆவணம் வழங்கி தொழில் அபிவிருத்தி தடையை நீக்குமாறும் கோருகின்றனர்
அ . அச்சுதன்
