(முர்ஷித்)
மட்டக்களப்பு கோறளைப்பற்று பிரதேச சபை பேத்தாழை கலைமகள் முன்பள்ளியின் 2018 ஆண்டிற்கான கலை விழாவும் பிரியாவிடை நிகழ்வும் குகனேசன் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதேச சபை செயலாளர் திருமதி பத்மாலோஜினி லிங்கேஸ்வரன், சந்திரகாந்தன் பாடசாலை அதிபர் க.கதிர்காமநாதன்,பாலர் பணியக வெளிக்கள உத்தியோகஸ்த்தர் திருமதி கயல்விழி வினோதரன்,சிறுவர் மேம்பாட்டு உத்தியோகஸ்த்தர் ரி.எம்.எம்.காசீம்,சனசமுக நிலையத் தலைவர் ஜீ.மருதீபன் ஓய்வு பெற்ற அதிபர் த.இராசநாயகம் ஆகியோர்கள் நிகழ்வில் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதுடன் ஆசிரியர்களுக்கு மாணவர்களின் பெற்றோர்களினால் நினைவு சின்னங்களும் பாரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது












