கவிஞர், ஆசிரியர் சற்குணலிங்கம் ஹோபிநாத் எமுதிய இரட்டைச் சுழி கவிதை நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை (29) மாலை 5 . 00 மணிக்கு திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி மண்டபத்தில் மூத்த எமுத்தாளர் திருமலை நவம் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.விழாவில் அதிதிகள் வரவேற்கப்படுவதையும், மங்கல விளக்கினை நிகழ்வின் சிறப்பு அதிதியான திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் அ . அச்சுதன் ஏற்றிவைப்பதையும், திருமலை நவம் தலைமையுரை நிகழ்த்துவதையும், அதிதிகளுக்கு நூலின் முதல் சிறப்பு பிரதிகளை நூலாசிரியர் வழங்கி வெளியீட்டு வைப்பதையும், கவிஞர் தி. பவித்திரன் நூலின் மதிப்பீட்டுரையை வழங்குவதையும், நிகழ்வின் முதன்மை அதிதியான திருகோணமலை வடக்கு வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ந. ஜசிந்தன், சிறப்பு அதிதிகளான சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் வி. குணபாலா, ஊடகவியலாளர் அ . அச்சுதன் ஆகியோர் உரைநிகழ்த்துவதையும், நூலாசிரியர் சற்குணலிங்கம் ஹோபிநாத் ஏற்புரை வழங்குவதையும் படங்களில் காணலாம்

.அ . அச்சுதன்






