LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, December 3, 2018

சூழல் மைய அனர்த்த அபாயக் குறைப்பு தொடர்பான மாவட்ட மட்ட கலந்துரையாடலும் விளக்கமளிப்பும்

(தேவா)
சூழல் மைய அனர்த்த அபாயக் குறைப்பு தொடர்பான மாவட்ட மட்ட கலந்துரையாடலும் விளக்கமளிப்பும் மட்டக்களப்பு மாவட்ட மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் எம்.எம்.றியாஸ் தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தி, பிரதம கணக்காளர், கே.ஜெகதீஸ்வரன், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இக்கலந்துரையாடலில், இயற்கையோடு இணைந்ததான  அனர்த்த இடர்க் குறைப்பு நடவடிக்கை தொடர்பிலான விளக்கமளிப்பினை வவுணதீவு அபிவிருத்தி நிறுவனத்தின் அனர்த்தக் குறைப் பு இணைப்பாளர் அ.தர்சன் வழங்கினார்.

அனர்த்தகாலப் பாதுகாப்பு தொடர்பில் அறிவுறுத்தப்பட்டு வருகின்ற அதே நேரத்தில் முன்கூட்டியதாகவுN அனர்த்தம் ஏற்படும் பிரதேசங்களில் அதற்கான ஏற்பாடுகளுடனான அனர்த்த அபாயக்குறைப்பு வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இலங்கையில் சுனாமி ஏற்பட்டதன் பின்னர் அனர்த்த எச்சரிக்கைக் கோபுரங்கள் அமைக்கப்பட்டு ஒத்திகைகளும் நடத்தப்பட்டு பாதுகாப்பு முன்னெடுப்புக்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என இதன் போது கருத்துத் தெரிவித்த மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் எம்.எம்.றியாஸ் கூறினார்.

அத்துடன், அனர்த்த அபாயக் குறைப்பு தொடர்பான வெளிப்படுத்தல் விளக்கமளிப்புகளும் இதன்போது சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

சிறுவர் நிதியத்துடன் இணைந்ததாக வவுணதீவு அபிவிருத்தி நிறுவனம் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கன்னன்குடா, ஈச்சந்தீவு, கரையாக்கன்தீவு, கொத்தியாபுல ஆகிய கிராமங்களை உள்ளடக்கியதாக இளைஞர்கள் தலைமையிலான சுற்றுச் சூழல் நலன் சார்ந்த அனர்த்த அப்பாயக்குறைப்புத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் குறித்ததான விளக்கமளிப்பாகவே இது அமைந்திருந்தது.

அத்துடன், சூழலைப் பாதுகாப்பதற்கான சர்வதேச ஒன்றியத்தின் ஆலோசகர் சிஹான் ஸரூக் சூழல் பல்வகைமை, அனர்த்தத்தினை எதிர் கொள்ளும் வகையில், சூழல் பாதுகாப்பினை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கமளித்தார்.


மட்டக்களப்ப மாவட்டத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களையும். அதனால் ஏறபடும் ஆபத்துக்களையும் தணிக்கும் வகையில் மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டல் மற்றும் பணிப்புரையின் கீழ் அனர்த்த முகாமைத்துவப்பிரிவின் ஊடாக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட வருவதாக மாவட்ட ஊடகப்பிரிவு தெரிவித்தது.






 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7