
நாளை இடம்பெறவிருந்த பிரெக்சிற் ஒப்பந்தம் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பை பிரதமர் ஒத்திவைப்பதற்கு தீர்மானித்துள்ளதையடுத்து பிரதமரின் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக எதிர்க்கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
வாக்கெடுப்பை பிற்போட்டது கோழைத்தனமான செயல் என பிரதமரை சாடியுள்ள நிக்கோலா ஸ்டேர்ஜன் ஏற்கனவே தொழிற்கட்சித் தலைவர் கூறியதன்படி அரசாங்கத்தின்மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜெரமி கோர்பினுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு லிபரல் டெமக்ரட்ஸ் கட்சியின் தலைவர் சேர் வீனஸ் கேபிள் தொழிற்கட்சித் தலைவருக்கு இன்று அழைப்பு விடுத்துள்ளார்.
