ஆப்கானிஸ்தானின் தலிபான் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள சில மாவட்டங்களில் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 35 கிளர்ச்சியாளர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படையினர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வௌியிட்டுள்ள உத்தியோகபூர்வ செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.காஸ்னி மாகாணத்தில் உள்ள அண்டார், கெரோ, டெயக் மற்றும் காராபாக் மாவட்டங்களில் தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளாக கருதப்படுகிறது.
இந்த நிலையில், குறித்த பகுதிகளில் பதுங்கியுள்ள தலிபான் பயங்கரவாதிகளை குறிவைத்து ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் இன்று வான்வழியாக தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 35 கிளர்ச்சியாளர்கள் உயிரிழந்ததாகவும். மேலும் 17 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் படையினரின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.





