LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, December 13, 2018

திருகோணமலை நகராட்சி மன்றத்தின் 2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (13)ம் திகதி 22 பேரின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.


திருகோணமலை நகராட்சி மன்றத்தின் தலைவர் நா.இராஜநாயகத்தின் தலைமையில் பதீட்டுக்கான விசேட கூட்டம் இன்று இடம் பெற்றது.இன்றைய கூட்டத்தில் சபையின் உறுப்பினர்கள் அனைவருமாக 24 பேரில் 23 பேர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் சபையின் எதிர்வருகின்ற 2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிககை தலைவரால் சமர்ப்பிக்கப்பட்டது.

இதில் மொத்த பெறுகை 302800000.00(முன்னூற்றி இரண்டு மில்லியன் எட்டு இலட்சம்) மொத்த செலவீனம் 302793000.00(முன்னூற்றி இரண்டு மில்லியன் எழுபத்து ஒன்பது இலட்சத்து முவாயிரம் ) சபைநிதி சாதகம் 7000.00(ஏழாயிரம் ரூபாய்) எனவும்தலைவரால் சமர்பிக்கப்பட்டது.

இதன் போது பல உறுப்பினர்களின் விவாதங்களும் கேள்விகளும் கோரபட்டு சபையின் தலைவரால் வாக்கெடுப்புக்கு விடபட்டது.
பாதீட்டை முன் மொழிந்தவர் உப தலைவர் சே.சிறிஸ்கந்தராஜா வழிமொழிந்தவர்  உறுப்பினர் கா.கோகுல்ராஜ்

இதன் போது தீயணைப்பு பிரிவிற்கு அதிக செலவீனங்கள்  காணப்படுதாகவும் அச்செலவு நகரசபை எல்லைக்கு வெளியில் ஏற்படும் தீவிபத்துக்களுக்கு நகரசபையின் தீயனைப்பு பிரிவு சென்று தீயனைப்பு பணியில் ஈடுபடுவதனால் செலவீனம் அதிகமாகவுள்ளது.என கூறி  பாதீட்டுக்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாக தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் உறுப்பினர் சி.சிவகுமார்(சத்தியன்) எதிர்ப்பை தெரிவித்தார்.ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ஒருவர் கூட்டத்திற்கு சமூகம் தரவில்லை.

ஏனைய உறுப்பினர்களான தமிழ் தேசிய கூட்டமைப்பு,-09 பேர் சுயேட்சை குழு 2 பேர் ,தமிழ் காங்கிரஸ் 2 பேர், ஜக்கிய தேசிய கட்சி 1 பொது ஜன பெரமுன 4 பேர், ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் 1 ,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 1, தமிழர் விடுதலை கூட்டனி 1,  ஸ்ரீ லங்கா சுகந்திரக் கட்சி 1 ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் அடங்களாக 22 பேர் ஆதரவு தெரிவித்தனர்.

எதிர்வரும் ஆண்டு புதிய சந்தைக் கட்டிட தொகுதி உல்லாசப் பயணிகளுக்கான மலசலகூடத் தொகுதி உணவு விடுதிகள் புதிய வீதிகள் வடிகான்கள் போன்ற அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் மக்களுக்கு தேவையான சேவைகள் பலவற்றை மேற்கொள்ள அதிகமான தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் விசேடமாக 7.5 சதுர பரப்பளவு கொண்ட திருகோணமலை நகர எல்லையில் உள்ள அனைத்து கிரவல் பாதைகளும் தார் வீதிகளாக்கப்படவுள்ளது.போன்ற பல விடயங்களை தனது பாதீட்டு உரையின் போது தலைவர் நா.இராஜநாயகம்  தெரிவித்தார்.

அ . அச்சுதன்

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7