
கடந்த சனிக்கிழமை காலை மிசிசாகாவில் உள்ள பூங்காவில் 14 வயது சிறுவன் ஒருவரின் சடலம் மிட்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸாரின் மனித கொலை குறித்த சிறப்பு அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.
Truscott Drive மற்றும் Southdown வீதியில் அமைந்துள்ள Meadow Parkஇல், நேற்றுக் காலை எட்டு மணியளவில், அந்த பகுதியால் சென்ற ஒருவர் இந்த சடலத்தைக் கண்டு பொலிஸார் தகவல் கொடுத்துள்ளார்.
அதனை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீடடதுடன், மனித கொலை தொடர்பிலான சிறப்பு விசாரணைப் பிரிவின்ர் விசாரணைகளைப் பொறுப்பேற்று முன்னெடுத்து வந்த விசாரணைகளின் அடிப்படையில் 20 வயதுடைய நிக்கோலஸ் மஹாபிர் என்பவரை கைது செய்தனர்.
இதன் பின்னர் அடுத்த நாள் 20 வயதுடைய அவரது சகோதரர் மார்க் மஹாபிர் கைது செய்யப்பட்டு இரண்டாவது மனித கொலை குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
அந்தவகையில் முதலில் கைது செய்யப்பட்ட நபர் இன்று காலை 10 மணிக்கு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். அத்தோடு அவரது சகோதரர் கிறிஸ்மஸ் தினத்தன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
மேலும் கிளார்க்சன் மேல்நிலை பள்ளியில் தரம் 9 ல் கல்வி பயின்று வந்த உயிரிழந்த Driver-Martin இன் இறுதி கிரியைகள் எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
