அருணாசல அட்சர மணமாலை ஓதலும், ஜயந்தி பூசையும் பிரார்த்தனை வழிபாடுகளுடன் ஆரம்பமாகும் ஜயந்தி விழாவில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மா.உதயகுமார் கலந்து கொள்கிறார்.
கௌரவ அதிதியாக உதவி மாவட்டச் செயலாளர் ஆ.நவேஸ்வரன், அழைப்பு அதிதியாக மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கி.குணநாயகம் ஆகியோர் கலந்துகொள்வர். சிறப்புரையினை ஓய்வுபெற்ற மக்கள் வங்கி முகாமையாளர் எஸ்.யோகராஜா நிகழ்த்துவார்.
திருவண்ணாமலை ஸ்ரீ ரமணாச்சிரமத்தில் நிரந்தர அனுக்கிக விலாசத்துடன் விளங்கும் ஸ்ரீ பகவத் தந்நிதியில் எதிர்வரும் திங்கட்கிழமை புனர்வசு நட்சத்திரம் கூடிய சுப தினத்தில் ஸ்ரீ பகவத் கிருihயால் ஜயந்தி மகோற்சவ பெருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் ஜயந்தி விழாவையொட்டி ஸ்ரீ ரமண மகரிசி அறப்பணி மன்றத்தின் இலங்கைக்கிளை இவ்விழாவை சிறப்பாகக் கொண்டாடுவதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. 12 மணிக்கு நிறைவுறும் விழாவின் இறுதியில் அன்னதானம் வழங்கப்படும்.
ஸ்ரீ ரமண மகரிசி அறப்பணி மன்றத்தின் இலங்கைக்கிளையினால் கிரான், கோரகல்லி மடு பிரதேசங்களில் பாலர் பாடசாலைகள் நடத்தப்படுவதுடன், மன்னம்பிட்டி தம்பன்கடுவையில் ஸ்ரீ ரமண மகரிசி யாத்திரிகர் மடம் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், கோரகல்லிமடு ஸ்ரீ ரமண மகரிசி தமிழ் விததியாலயத்தின் கட்டடமும் அமைத்துக்கொடுக்க நடவடிககை மேற்கொள்ளப்பட்டது.
அடீத நேரம் கல்குமா, மட்டக்களப்பு பிரதேசங்களில் ஒலிபெருக்கி வசதிகள் தேவைப்பட்ட ஆலயங்களுக்கு அவ் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
தற்போது மட்டக்களப்பு - பொலநறுவை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள மாகுப்ப வெள்ளிமலைப்பிள்ளையார் ஆலய மீள் நிர்மாணப்பணியும் அப்பிரதேச மீள்குடியேற்றமும் தொடர்பான வேலைகளை அரசாங்கத்தின் ஊடாக ஸ்ரீ ரமண மகரிசி அறப்பணி மன்றத்தின் இலங்கைக்கிளை முன்னெடுத்து வருகிறது என்று கிளையின் தலைவர் மா.செல்லத்துரை தெரிவித்தார்.
