
திருமதி ஜிஹானா அலிஃப் கல்முனை வலயக் கல்வி அலுவலக முகாமைத்துவத்துக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளராக மீண்டும் இன்று (24) நியமிக்கப் பட்டுள்ளார் .
கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் முகாமைத்துவத்துக்குப் பொறுப்பாக கடமையாற்றிய Dr.S.M.M.S. உமர் மௌலானா மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி அலுவலகத்துக்கு வலயக்கல்விப் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்று சென்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு திருமதி ஜிஹானா அலிஃப் கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் M .S .அப்துல் ஜலீல் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்
சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தில் உதவிக்கல்விப் பணிப்பாளராகவும் ,கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் பிரதிக் கல்விப்பணிப்பாளராகவும் ,நிந்தவூர் கோட்டக் கல்வி அதிகாரியாகவும் கடந்த காலங்களில் கடமை புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
