(தர்சன்)
இதனடிப்படையில் வாகரை விவசாய திணைக்களத்தின் விவசாய போதனாசிரியர் பிரிவின் ஏற்பாட்டில் பட்டாளப்புழு பீடை தாக்கத்தினால் சோளம் பயிர் பாதிக்கப்படும் நிலைமை தொடர்பில் விவசாயிகளுக்கு விழிப்பூட்டும் கருத்தரங்கு வெருகல் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
வாகரை விவசாய திணைக்களத்தின் விவசாய போதனாசிரியர் எஸ்.பிரபாகரன் தலைமையில் வெருகல் பிரதேசத்தில் பயிரிடப்பட்ட சோளம் விவசாயிகளின் சேனையில் விழிப்பூட்டும் கருத்தரங்கு நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் ப.பேரின்பராசா, வடக்கு வலய உதவி விவசாய பணிப்பாளர் ஈ.சுகந்ததாசன், மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்கள மறுபயிர் பாடவிதான உத்தியோகத்தர் ந.கணேசமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பட்டாளப்புழு எனும் பீடையில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் தொடர்பில் கருத்துக்களை வழங்கினார்கள்.
இவ்விழிப்புணர்வு கருத்தரங்கில் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கி விளக்கங்களை வழங்கியதுடன், விவசாய செய்கை செய்யும் இடங்களில் விவசாயிகளுக்கு பட்டாளப்புழு இனங்காண்பது எவ்வாறு என்பது பற்றியும் விளங்கங்களை வழங்கினர்கள்.
பட்டாளப்புழு எனும் பீடை தாக்கம் அம்பாறை மாவட்டத்தில் அதிகம் காணப்படுகின்றது. இது தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் சோளம் பயிர் செய்யப்பட்டுள்ள பிரதேசத்தில் இனங்காணப்பட்டுள்ளது.
இதன்காரணமாக சோளம் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்ற நிலையில் விவசாயிகளின் பிரச்சினைகளை ஆரம்பத்திலே இங்கண்டு தீர்க்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களம் விவசாயிகளுக்கு விழிப்பூட்டும் கருத்தரங்கினை பல இடங்களில் நடாத்தி வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 643 கெஹ்டேயர் நிலப்பரப்பில் சோளம் பயிர்செய்கை செய்யப்பட்டுள்ளதாகவும், இவற்றில் 40 வீதமான சோளம் பயிர்களில் பட்டாளப்புழு பீடை தாக்கியுள்ளதாகவும், இதனை இரசாயண மருந்து மூலம் கட்டுப்படுத்த முடியும் என்றும் மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் ப.பேரின்பராசா தெரிவித்தார்.
